பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முகத்தில் தோன்றும் முடி தான். சிறு சிறு முடிகள் முகத்தில் தோன்றி முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.
கடலை, மஞ்சள்தூள்: கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல் ஆக்கி, அதை முகத்தில் பூச வேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இரு முறை செய்து வர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும்.
தேன், எலுமிச்சை: தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்று சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.