இன்றைய இளம் வயது பெண்கள், பியூட்டி பார்லர் சென்று பேசியல் செய்துக் கொள்கின்றனர். பார்லர்களில், கெமிக்கல் க்ரீம்களை உபோயகப்படுத்தி பேசியல் செய்வதால், முக அழகு நாளடைவில் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய நம் வீட்டிலே பழங்களை கொண்டு பேசியல் செய்யலாம். பழ பேசியல் செய்வதன் முறையை இன்றைக்கு நாம் அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள்
தக்காளி
பப்பாளி
பன்னீர்
ஆப்பிள், தக்காளி, பப்பாளி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு மிக்சியில் அரைக்க வேண்டும். அரைத்த கலவையுடன் சிறிது பன்னீர் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்பிளை செய்து, 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் முகம் பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.