பெண்களின் முக அழகில், முக்கிய பங்கு மஞ்சளுக்கு உண்டு. அவற்றை நாம் விரிவாக இன்றைய அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம். 


சில பெண்களுக்கு, முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும். இதை சரி செய்ய கடைகளில் கிடைக்கும், க்ரீம்கள், லோஷன்களை உபோயக்கப்படுத்துவர். ஆனால், அவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை.


தேவையற்ற முடிகள் முகத்தில் இருப்பார்கள், கஸ்தூரி மஞ்சள் உபோயகப்படுத்தலாம். இது நாட்டு மருந்து கடைகளில், முழு மஞ்சளாகும், மஞ்சள் பொடியாகவும்  கிடைக்கும். இதனுடன் பால் சேர்த்து, தினமும் முகத்தில் பூசி வந்தால், முடிகள் காணாமல் போய்விடும். 


மேலும் க்ரீம்களை உபோயகப்படுத்தி, முகத்தில் உள்ள முடிகளை அகற்றிய பின்பு, கஸ்தூரி மஞ்சளை பூசி வந்தால், முடிகள் புதிதாக வளராது. இது உடனே சரியாடையாது. ஆனால் தொடர்ந்து பின்பற்றிவந்தால், நல்ல மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம். 


ஊறல், அலர்ஜி போன்ற தோல் நோய்கள் உள்ளவர்கள், மஞ்சளை வெந்நீரில் குழைத்து, அரிப்பு இருக்கும் இடங்களில் தேய்த்து வந்தால் தோல் பிரச்சனைகள் சரியடையும்.


குளிக்கும் போது மஞ்சளை போட முடியாதவர்கள் தினமும் நேரம் கிடைக்கும் போது இந்த பவுடரை முகத்தில் போட்டு நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வந்தால், முகம் பளப்பளப்பாகும்.



Find out more: