தோல் பராமரிப்பிற்கு முக்கியமானது பப்பாளி பழம். இதன் நன்மைகளை நாம் இன்றைய அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம்.
பொதுவாக ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள் சீசன் மாதங்களில் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் பப்பாளி பழம் வருடத்தில் உள்ள அனைத்து மாதங்களிலும் கிடைக்கும்.
பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இதை தினமும் சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறுகள் சரியாடையும்.
பப்பாளி பழச்சாற்றை முகத்தில் பூசி வந்தால், முகம் பொலிவடையும்.
இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவதில் பப்பாளிக்கு முக்கிய பங்கு உண்டு.
பப்பாளி பழத்தை சிறிது துண்டுகளாக வெட்டி, அதை நசுக்கி கழுத்து பகுதிகளில் தேய்த்து வந்தால், கருமைகள் நீங்கும்.