இன்றைய காலத்தில், ஆண், பெண் இருவருமே முக கருமையால் அவதிப்படுகின்றனர். இதை சரி செய்ய வீட்டிலியே நாம் ப்ளீச்சிங் செய்யலாம். இந்த ப்ளீச்சிங்கின் முறையை, நாம் விரிவாக பார்க்கலாம்.


1.  வெள்ளரிக்காயை சாறு எடுத்து கொண்டு, அதனுடன் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து வந்தால், படிந்திருக்கும், கருமைகள் நீங்கிவிடும். 


2. 1 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி பாதம் பேஸ்டை சேர்த்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து கழுவினால் முக கருமை நீங்கும்.
3. முட்டையின் வெள்ளைக்கருவுடன், எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாகும். 


4. வெள்ளை வினிகர் 1 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதனுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து கருமை படிந்திருக்கும் பகுதிகளில் தேய்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். 


5. எலுமிச்சை சாற்றுடன், மஞ்சள் ஒரு சிட்டிகை கலந்து முகத்தில் தடவலாம். பின் சருமம் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் தடவலாம்.



Find out more: