தலையில் பொடுகு இருந்தால், முடி வளராது மேலும், இருக்கும் முடியும் கொட்டி விடும். கடைகளில் கிடைக்கும் ஷாம்பூவை உபோயகப்படுத்துவதினால், இதை சரி செய்ய இயலாது. இதை நிரந்தரமாக விரட்டும் எளிய மருந்தினை நாம் இன்றைய அழகு குறிப்பு தகவலில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டையின் வெள்ளை கரு - 1
நல்லெண்ணெய் - 25 ml
வெந்தயம் - அரை கப்
செம்பருத்தி பூ - 5
இரவில் படுப்பதற்கு முன்பு, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும், பிறகு, காலையில் அதனுடன் செம்பருத்தி பூவையும் சேர்த்து, மிக்சியில் மையாக அரைத்து விட வேண்டும்.
குளிப்பதற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு, முட்டையின் வெள்ளைக்கருவை பொடுகு இருக்கும் இடங்களில் தலையில் நன்கு தடவ வேண்டும்.
இதையடுத்து 20 நிமிடம் கழித்து, நல்லெண்ணெய் தலையில் தேய்த்து, 1 மணி நேரம் ஊறவிட வேண்டும். நன்கு ஊறிய பிறகு, ஷாம்பூவிற்கு பதில் அரைத்து வைத்த வெந்தயம், செம்பருத்தி பூ பேஸ்டை, தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
இவ்வாறு வாரம் ஒரு முறை வைத்து, தொடர்ந்து 2 மாதம் பின்பற்றி வந்தால், பொடுகு தொல்லை நிரந்தரமாக நீங்கி விடும்.