பெண்களின் அழகு எல்லா சமயங்களிலும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசம் நம் அழகில் தோன்றும். இதற்கு காரணம் ஹார்மோன்கள் தான்.
குழந்தை பிறந்த பிறகு, பெண்களுடைய அழகு குறைந்தது போல் இருக்கும். இதற்கு காரணமும் ஹார்மோன் தான். சிலருக்கு முகம் கருமையாக இருக்கும். முகப்பருக்கள் அதிகமாக வந்தது போல் உணர்வார்கள்.
புதிதாக தாய்மை அடைந்தவர்கள், தங்கள் அழகை மேம்படுத்த இந்த அன்னாசி பேசியலை உபோயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள்
அன்னாசி துண்டுகள் - 1 கப்
வாழைப்பழம் - அரை துண்டு
சர்க்கரை - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
ரோஜா இதழ் - சில
அன்னாசி பழத்தை மிக்சியில் அரைத்து, அதனுடன் வாழை பழத்தையும் அரைத்து, இதனுடன் சர்க்கரை மற்றும் தேங்காய் என்ணெய் கலந்து நன்றாக கலக்கி அதன் மேல் ரோஜா இதழை தூவி ரெடியாக வைத்து கொள்ளுங்கள்.

இதை குளிப்பதற்கு முன்பு முகம், கை கால் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு பூசி, உலர்ந்த பின்பு, வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் படிந்திருக்கும் கருமை மாறும்.
இதை தொடர்ந்து பூசி வந்தால் மேனி பளபளப்பாகும்.