முடி கொட்டும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், வெந்தய ஷாம்பூவை உபோயோகிக்கலாம். இந்த வெந்தய ஷாம்பூவை பயன்படுத்தி வந்தால், இனி முடி கொட்டும் பிரச்சனை உங்களுக்கு இல்லை. வெந்தயத்தில் இரும்பு மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. 


வெந்தய ஷாம்பு தயாரிக்கும் முறையை நாம் இப்போது பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


வெந்தயம் - ஒரு கப் 
யோகார்ட் - கால் கப் 
ஆலிவ் எண்ணெய் - கால் கப்


இரவு படுக்கும் முன்பு வெந்தயத்தை ஊறவைத்து விட்டு, காலையில் மிக்சியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். 


யோகார்டிலுள்ள நீரை வடித்துவிட்டு, அதையும், ஆலிவ் எண்ணெயையும், அரைத்த வெந்தயத்துடன் கலந்து கொள்ளுங்கள்.



இந்த கலவையை தலை மண்டையில் இருந்து முடி வரை நன்கு அப்பளை செய்து கொள்ளுங்கள். பிறகு 1 மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள். 


இதனை தொடர்ந்து செய்து வந்தால், முடி கொட்டாது,  நல்ல அடர்த்தியாக வளரும்.


Find out more: