நமது முன்னோர்கள் சோப்பிற்கு பதிலாக மூலிகை வாசனை பொடியை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் தான் அவர்கள் சருமம் மிகவும் இளமையாக இருந்தது. இந்த மூலிகை வாசனை பொடி, அனைத்து சரும பிரச்சனைகளையும் சரி செய்துவிடுகிறது. இதன் செய்முறையை இப்போது நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


கஸ்தூரி மஞ்சள் பொடி - அரை கப் அளவு 
சந்தனப் பொடி - கால் கப் 
கடலை மாவு - அரை கப் 
பச்சைப் பயிறு பொடி - 1 கப் 
வேப்பிலை பொடி -அரை கப்


கஸ்தூரி மஞ்சள், பச்சை பயிறு ஆகிய இரண்டையும், வெயிலில் நன்கு காய வைத்து பொடியாக திரித்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் சந்தன பொடி, வேப்பிலை பொடி, கடலை மாவு ஆகிய மூன்றையும் கலந்து கண்ணாடி டப்பாவிற்குள் காற்று புகாத அளவிற்கு அடைத்து வையுங்கள். 



இந்த மூலிகை வாசனை பொடியை குளிக்கும் போது, உடம்பில் எல்லா பகுதிகளிலும் தேய்த்து, 5 நிமிடம் கழித்த பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து, இந்த பொடியை பயன்படுத்திவந்தால் சரும நோய்கள் அண்டாது. 


பருக்கள், தேமல், அக்குள் வியர்வை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


Find out more: