உடலில் சில பகுதிகளில் மட்டும் கருமை அதிகமாக இருக்கும். இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தால், இவ்வாறு கருமை உண்டாகும்.  இதை நிரந்தரமாக  சரி செய்ய சில குறிப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை இப்போது பார்க்கலாம்.


1. முழங்கை மற்றும் முழங்கால்களில் இருக்கும் கருமையை நாம் எலுமிச்சை உபோயோகப்படுத்தி சரி செய்யலாம். எலுமிச்சை சாற்றை கருமையாக இருக்கும் பகுதிகளில் தேய்த்து, 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் கருமை மாறும்.


2. 1 தேக்கரண்டி வெள்ளரிக்காய் சாற்றில், 1/2 தேக்கரண்டி புளி சாற்றை கலக்கி, கருமை தங்கியிருக்கும் பகுதிகளில் தேய்த்து கழுவ வேண்டும். 


3. வினிகர் மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 


4. தினமும் படுக்கும் முன்பு, கருமையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் கருமை மாறும்.


5. பால் மற்றும் தேனை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, கருமை இருக்கும் பகுதிகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்த பின்பு, கழுவினால் நல்ல மாற்றத்தை காணலாம்.


Find out more: