பழங்களின் நன்மைகளை சொல்ல வார்த்தையே இல்லை என்பதை நாம் அனைவருமே அறிந்தோம். அதே போல், அழகை அதிகரிப்பதிலும் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதிலும் ஆரஞ்சு பழம், உடல் அழகை கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 


இப்போது சரும நிறத்தை, ஆரஞ்சு பழம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


ஆரஞ்சு தோல் பவுடர் - 2 ஸ்பூன் 
முல்தானி மட்டி - 1 ஸ்பூன்
சந்தானம் - 1 ஸ்பூன் 
தயிர் - 2 ஸ்பூன் 


ஆரஞ்சு தோலை, வெயிலில் காய வைத்து பவுடராக்கி கொள்ளுங்கள். பிறகு அதனுடன் மேலே, குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வாருங்கள். 


இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு, இதை சுத்தமான தண்ணீரில் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை வாரம் ஒரு முறை வைத்து பின்பற்றி வந்தால், சரும அழகு அதிகரிப்பதை நீங்களே காணலாம்.


Find out more: