முகம் பொலிவு இழந்து காணப்படும் நேரத்தில், நீங்கள் இந்த பேசியலை பயன்படுத்தி, வந்தால் முகம் ஜொலிக்கும். அதே போல, பியூட்டி பார்லரில் அதிக பணம் செலவழித்து, பேசியல் செய்வதற்கு பதில் நாம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செலவு இல்லாமல், முகத்தை அழகாக்க இந்த பேசியலை உபோயோகப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
வாழை பழம் துண்டுகள் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி

இந்த மூன்றையும் மிக்சியில், பேஸ்ட் பதத்தில் அரைத்து கொள்ளுங்கள். பிறகு அரைத்த இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில், மேல் நோக்கி தடவி கொள்ளுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதனால், முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறுவதுடன், முகம் பளபளப்பாகும்.