சிலருக்கு முகம் எண்ணெய் வடிந்து காணப்படும். எவ்வளவு தான் க்ரீம்கள், லோஷன்கள் பயன்படுத்தினாலும், அவர்களால் இந்த எண்ணெய் பிசுபிசுப்பை சரி செய்ய முடியாது. முகத்தில் எண்ணெய் வடிவதை, தடுக்க செய்யும் அழகு குறிப்புகளை இப்போது நாம் பார்க்கலாம்.
எண்ணெய் பிசுபிசுக்களை நீக்குவதில், எலுமிச்சை சாற்றிற்கு முக்கிய பங்கு உண்டு.
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி உடன், தேன் - 1 தேக்கரண்டி கலந்து முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி பூசி வந்தால், எண்ணெய் பிசுபிசுக்கள் நீங்கி, முகம் பளபளப்பாகும்.
4 தேக்கரண்டி தக்காளி சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் எண்ணெய் பிசுபிசுக்கள் வருவது தடுக்கப்படும்.