இன்றைய காலத்தில், இளம் வயதுடைய பெண்கள், பெரும்பாலும் பாதிப்படைவது முகப்பருவால் தான். முகப்பருவை சரி செய்யும் பேசியலை இன்றைக்கு நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


முல்தானி மட்டி - 1 ஸ்பூன் 
கடலை மாவு - 1 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - 1 ஸ்பூன் 
பால் - 1 ஸ்பூன் 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை, சமமாக கலந்து கொண்டு, பேஸ்ட் பதத்திற்கு ஆக்கிக்கொள்ளுங்கள். 


பின்பு அதை, முகம் மற்றும் கழுத்து பகுதியில், மேல் நோக்கியவாறு பூசி வாருங்கள். 


20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால், முகத்தை கழுவ வேண்டும். 


இதை வாரம் ஒரு முறை வைத்து, மாதத்திற்கு நான்கு முறை செய்து வந்தால், முகப்பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.


Find out more: