பெர்மியூம் வாசனை நீண்ட நேரம் வைத்திருக்க அறிவியல்லாம் தேவையில்லை, சின்ன ட்ரிக்ஸ் போதும். வெப்பமான இடத்தில் பெர்மியூம் பாட்டில் ஈரப்பதம் குறைந்து வாசனை போய்விடும்.
நல்ல குளிர்ந்த இடங்களில் வையுங்கள், ஜன்னலுக்கு அருகில் வைக்க வேண்டாம். இப்படி செய்தால் பாட்டிலில் வாசனை நிலைத்திருக்கும். பெர்மியூம் போடுமுன் அக்குளில் வாசலின் தடவிக் கொள்ளுங்கள். வறண்ட சருமத்தை விட எண்ணெய் சருமத்தில் பெர்மியூம் நிலைத்திருக்கும்.
மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து நறுமணம் நிலைபெறச் செய்யலாம். குளித்து முடித்தவுடன் பெர்மியூம் போடுங்கள், ஈரப்பதம் பெர்மியூம் நறுமணத்தை பிடித்து கொள்ளும்.