மழையில் நனையும் போது முடி சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மழையில் நனைந்த பிறகு சில விஷயங்களை பின்பற்றுவதால் முடி பாதுகாக்கலாம்.மழையில் நனைந்து வந்ததும் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள்.
நனைவதன் மூலம் தேங்கி உள்ள மாசுக்களை அகற்றலாம். குளிக்கும் தண்ணீரில் வேப்ப இலைகளை போட்டு ஊற வைத்து அந்த நீரில் தலை முடியை அலசுங்கள், பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.
வேப்ப இலைகள் உச்சந்தலையில் பொடுகு அகற்ற உதவுகிறது. வேப்ப இலைகளை மூலப்பொருளாகக் கொண்ட ஷாம்பூவை பயன்படுத்தலாம்.