மும்பை:
இலவசமாக கிடைக்கிறது... கிடைக்கிறது என்று சொல்லியிருக்கார் இவர். என்ன இலவசம்? சொன்னது யாருன்னு பாருங்களேன்.


'சிபில்' நிறுவன கடன் தகுதி அறிக்கைதான் இலவசமாக வழங்கப்பட உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். என்னன்னு தெரிஞ்சுக்குவோமா!


வங்கி, நிதி நிறுவனங்கள் ஆகியவை, 'சிபில்' நிறுவனத்தின் கடன் தகுதி அறிக்கையின் அடிப்படையில் தனி நபருக்கு கடன்களை வழங்குகின்றன. தனிநபர் கடன், கல்விக் கடன், வீட்டுவசதி கடன் என எந்த கடனை கேட்டாலும் வங்கிகள், முதலில், 'சிபில்' அறிக்கையை பரிசீலித்துதான் தங்களின் முடிவை எடுக்கின்றன.


இதற்காக கடன் பெறுவோரிடம் 550 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இனி இது ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக கொடுக்கப்போறாங்களாம். இதைதான் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் சொல்லியிருக்காருங்க. 


இந்த ஆண்டு இறுதிக்குள் சிபில் நிறுவனம், தனிநபருக்கு இலவச கடன் தகுதி அறிக்கை வழங்கும் பணியை தொடங்கும் என்று சொல்லியிருக்காருங்க. 



Find out more: