கலிபோர்னியா:
100 கோடி... 100 கோடி என்று சாதனையின் படிகளில் கிடுகிடுவென ஏறி நின்று சாதனை படைத்துள்ளதாலும் சரிவுதான்... சரிவுதான்...


விஷயம் இதுதான். அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது 100 கோடியாவது ஐபோனை விற்பனை செய்து சாதனைப்படைத்துள்ளது. இருந்தாலும் தற்போது விற்பனை குறைந்துள்ளதால் சரிவை சந்தித்து வருகிறது.


2007-ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் ஐபோன் வெளியிடப்பட்டது. அன்று ஆரம்பித்த ஆப்பிள் மோகம் முதல் முறையாக இந்த ஆண்டு கிடுகிடுவென குறைய தொடங்கியுள்ளது. இதை அந்த நிறுவனமே ஒத்துக்கொண்டுள்ளது என்பதுதான் ஆச்சரியம். 


இரண்டு காலாண்டுகளாக இந்த நிறுவன போன்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டின் விற்பனை 15 சதவீதம் குறைஞ்சிடுச்சு. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனன் தலைமையகத்தில் ஊழியர்களின் கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஒரு சாதனை குறித்து தெரிவித்துள்ளார். என்னவென்றால் கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் தனது 100 கோடியாவது ஐபோனை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாம். ஒரு பக்கம் சாதனை மறுபக்கம் சரிவா?


Find out more: