புதுடில்லி:
இனிமே டிஜிட்டல்தான்... டிஜிட்டல்தான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எதில் என்று தெரியுங்களா? இதே தெரிஞ்சுக்குவோமா?
வணிக முத்திரை சான்றிதழ் வழங்குவது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் இனி 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கும் வருகிறது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக முத்திரைக்காக விண்ணப்பிப்போர், கம்ப்யூட்டர் வாயிலாகவே, வணிக முத்திரை பதிவுச் சான்றிதழ் பெற முடியும். 'வணிக முத்திரையை பதிவு செய்வதற்கு வரும் விண்ணப்பங்கள், சான்றிதழ் தயாரிப்பு, பதிவு செய்த சான்றிதழை விண்ணப்பதாரருக்கு வழங்குதல் உட்பட அனைத்து செயல்பாடுகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன'.
தற்போது வணிக முத்திரை பதிவு சான்றிதழ் விண்ணப்பித்த எட்டு மாதங்களில் கிடைக்கிறது. இதை ஒரு மாதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கூடுதலாக 100 ஆய்வாளர்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது. எனவே இனி காலம் தாமதம் குறைந்து விடும் என்பதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.