புதுடில்லி:
வீட்டைத்தான் விட முடியலை... லோகோவையாவது யாராவது ஏலம் எடுங்கப்பான்னு முடிவு செஞ்சு இருக்காங்க போலிருக்கு.


வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு லண்டனில் "ஹாயாக" ஓய்வு எடுக்கும் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. பங்களாக்கள், கார்கள், நிறுவன பங்குகள் ஆகியவற்றை வரும் ஆகஸ்ட் 4 ம் தேதி ஏலத்திற்கு வர உள்ளன.



இதற்கு முன்னர் இவரது பங்களாவை ஏல விட... யாருமே வரலையே... இந்நிலையில் 2 வது முறையாக ஏலம் விடப்படவுள்ளது.
மல்லையாவின் ஜெட், கிங்பிஷர் வில்லா, கார்கள், கிங்பிஷர் பறவை லோகோ போன்றவற்றை 700 கோடி ருபாய்க்கு ஏலம் விடப்பட இருக்காங்க. 


ஆகஸ்ட் 4ம் தேதி வங்கிகள் மற்றும் வரிமான வரித்துறை இணைந்து ஏலத்தை நடத்த உள்ளன. இதிலாவது யாராவது வந்து கலந்துக்கொள்ளுங்க... ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கொண்டு வங்கிகள் மல்லையாவின் கடனை ஓரளவிற்கு ஈடுசெய்ய முயற்சிக்கின்றன. யப்பா... யாராவது வாங்கப்பா...


இந்த ஏலத்துக்காவது யாராவது வருவாங்களான்னு வங்கிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.


Find out more: