புதுடில்லி:
இது என்ன ஆடித் தள்ளுபடியா... தள்ளுபடியா என்று கேட்க வைத்துள்ளது இண்டிகோவின் விலை குறைப்பை கேட்டு... விஷயம் என்ன தெரியுங்களா?
இந்தியாவின் விமான நிறுவனமான இண்டிகோ உள்நாட்டு விமான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது. அதுவும் அதிரடியாக...
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 30 வரையில் உள்நாட்டு விமான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர் வழித்தடத்துக்கான குறைக்கப்பட்ட கட்டணமாக ரூ.806 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதேபோல் டெல்லி- ஜெய்ப்பூர் சிறப்பு சலுகை கட்டணம் ரூ.908, சென்னை - பெங்களூர் கட்டணம் ரூ.976, பெங்களூர் - கொச்சி கட்டணமாக ரூ.1,137- என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமான வழித்தடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.399-ஐ அறிவித்துள்ளது. இதேபோல் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனமும் சில வழித்தடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,199-ஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.