அமெரிக்கா:
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்ம இந்தியர்கள் 2 பேர் இடம் பிடிச்சு இருக்காங்க... யார்ன்னு பார்ப்போமா?


அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் சர்வதேச அளவில் ஐ.டி. துறையைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்களின் லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பிசோஸ் 2ம் இடமும், பேஸ்புக் தலைவர் மார்க் ஜீகர்பெர்க் 3-வது இடத்திலும் உள்ளனர்.


 இந்த பட்டியலில்தான் இந்தியர்கள் 2 பேர் நாங்களும் இருக்கோம்ல என்று இடம் பிடித்து இருக்காங்க... அவங்க யாருன்னா... இந்திய நிறுவனமான விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி 13வது இடத்தையும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் 17-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


 இந்த லிஸ்டில் அதிகம் பேர் அமெரிக்கர்கள்தான்.


Find out more: