வாஷிங்டன்:
இவர்தான்... இவரைதான் நியமித்துள்ளோம் என்று அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது.


உலக வங்கி தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம் நியமிக்கப்பட்டுள்ளாராம். இதைதான் அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது.


உலக வங்கியின் தலைவராக மீண்டும் ஜிம் யாங் கிம் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது.


ஜிம் யாங் கிங் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர். உலக வங்கி 12-வது தலைவராக பொறுப்பு வகித்துவரும் இவரது நான்காண்டு பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த நான்காண்டுகளுக்கும் இவரையே இந்த பொறுப்பில் நீட்டித்துள்ளதாக அமெரிக்காவின் நிதித்துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை மற்றும் கருவூல செயலாளர் ஜேக்கல் லியூ வெளியிட்டுள்ள அறிக்கை; ’உலக வங்கி தலைவராக தனது பதவிக்காலத்தில் சிறப்பாக செயலாற்றிய ஜிம் யாங் கிம்-ஐ மீண்டும் இப்பதவியில் நியமிப்பதன் மூலம் உலக வங்கி மேற்கொண்டுவந்த முக்கிய முன்முயற்சிகளையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 


Find out more: