மும்பை:
ரிலையன்ஸ் ஜியோவால் பிற செல்போன் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்று செய்திகள் பரபரக்கின்றன.


விஷயம் என்னவென்றால்... ரிலையன்ஸ் ஜியோ வெளியீடு விழாவில் முகேஷ் அம்பானி பேசிய நேரத்தில் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு ஜியோ கோடி கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

Image result for ஜியோ முகேஷ் அம்பானி


 நேற்று காலை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி பேசினார். 


அவர் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் கட்டணமில்லா இலவச சலுகைகள் குறித்து பேசி கொண்டிருந்த நேரத்தில் பங்கு சந்தையில் பாரத் ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் சரிவை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதில் பாரத் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.9,800 கோடி மற்றும் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.2,450 கோடி நஷ்டம் ஏற்பட்டதாம்.


 தொடர்ந்து ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதன் டாரிப் பிளானை மாற்றி டேட்டா பேக் கட்டண சதவீதத்தையும் குறைத்துள்ளதாக செய்திகள் பரபரக்கின்றன.


ஜியோவின் வருகையால் பல செல்போன் நிறுவனங்களும் தங்களின் டேட்டா பேக் சலுகைகளை அள்ளித்தர உள்ளதாம்.


Find out more: