மும்பை:
ஆங்காங்கே... டம்மு...டும்முன்னு வெடித்ததால் அதிர்ச்சியடைந்த சாம்சங் நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாம்.


என்ன விஷயம்ன்னா... சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களில் பேட்டரிகள் வெடிப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து அந்த போன்களை சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற முடிவு செஞ்சிருக்காம். 


 போன மாதம்தாங்க புதிதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 வெளி வந்துச்சு. ரொம்பவே பிரபலமடைந்த இந்த போனுக்கு என்ன கண்ணு பட்டுச்சோ... தெரியலை... ஆங்காங்கே... பட்டு.. டுப்பு... என்று சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பமாகி பேட்டரிகள் பஸ்ட் ஆகிடுச்சு... இந்த போன் இந்தியாவில் ரூ.60,000க்கு விற்பனையாகி இருக்கு. இதனால் புகார்கள் அதிகளவில் வந்து குவிய... பேரை காப்பாற்றிக் கொள்ள அதிரடியாக ஒரு முடிவை சாம்சங் நிறுவனம் எடுத்து இருக்கு.


இதற்கிடையில் போன்கள் வெடிப்பது சமூக வலைதளங்களிலும் வைரலாக அமெரிக்கா, தென்கொரியா நாடுகளிலும் இந்த மொபைல்  போன்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இனிமேல் தாமதிக்கக்கூடாது என்று அனைத்து கேலக்சி நோட் 7 மாடல் போன்களையும் சாம்சங் நிறுவனம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாம். 


இப்போ இந்த போனை வாங்கியவர்கள் சந்தோஷம் ஆகியிருப்பாங்க இல்லியா...


Find out more: