இங்கிலாந்து:
வர்றேன்... இந்தியாவுக்கு வர்றேன்... என்று கிரேட் எஸ்கேப் மன்னன் விஜய் மல்லையா விருப்பம் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கிய பெருமைமிகு மனிதர்... விஜய் மல்லையா. கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டம் பிடித்தார். இதுவே சாதாரண விவசாயி... ரூ.5 ஆயிரம் கடனை கட்டாவிட்டால் வங்கிகள் படுத்தும் பாடு வெளியில் சொல்லமுடியாத ஒன்று. இவர் பெரிய தொழிலதிபர் என்பதால் வாரி கொடுத்து விட்டு தற்போது விழிபிதுங்கி வருகின்றன வங்கிகள். 


சரி... விஷயத்துக்கு வருவோம்... இந்த கடன்கள் குறித்து வழக்குகளும் உள்ள நிலையில் நேரில் ஆஜராக கூறி மல்லையாவுக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.


 இந்நிலையில், திடீர் திருப்பமாக விஜய் மல்லையா இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தன்னுடைய பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


 இதனால் டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆன விஜய் மல்லையா, விரைவில் இந்தியா திரும்பி வழக்குகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. வருவாரா? இவர் வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.



Find out more: