பெங்களூரு:
உண்டுங்க... உண்டு முன்பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக இலவசமாக பயணம் செய்யலாம் என்று ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று 13-ம் தேதி பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களின் வசதிக்காக அந்நிறுவனம் இலவசப் பயணச்சலுகையை அறிவித்துள்ளது.
நேற்று பதிவு செய்த விமானத்தில் பயணிக்க முடியாதவர்கள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் தங்கள் பயணத்தை வேறு எந்த நேரத்திலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்காங்க...