புதுடில்லி:
ஸ்பீடு... ஸ்பீடு மற்றும் செயல்திறன் உள்ள இலவச வைபை வசதி வழங்க போறோமே என்று கூகுள் சொல்லியிருக்காங்க.


எங்கு வழங்க போகிறார்கள் தெரியுங்களா? இந்தியாவில்தான். கூகுள் ஸ்டேஷன் என்ற கட்டமைப்பின் மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச வைபை வசதியை வழங்க உள்ளதாகதான் சொல்லியிருக்காங்க...


 கூகுள் நிறுவனம் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதை ஒட்டி டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்நிறுவன இணை இயக்குனர் சீஷர் சென்குப்தா என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?


 கூகுள் நிறுவனம் தனது முதல் கூகுள் ஸ்டேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இலவச வைபை வழங்கப்படும்.


 ரயில்வேயின் ‘ரயில்டெல்’ நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 52 ரயில் நிலையங்களில் இலவச வைபை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது என்று சொல்லியிருக்கார். இதனால் வேகம் மற்றும் செயல் திறன் அதிகம் இருக்குமாம்...



Find out more: