

கூடங்குளம், தூத்துக்குடி ஸடைர்லைட், எட்டு வழிச்சாலை,ஹைட்ரோ கார்பன் திட்டங்களுககு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் வெளியிடப்போவதாகவும் முகிலன் பிப்ரவரி 15ம் தேதி கூறியிருந்தார். பிறகு ஐந்து மாதங்களாக அவரை காணவில்லை.
இந்நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்ட முகிலன் தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தனர். வேலூரில் போலீசார் காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர், பல மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.