சென்னை:
"பஸ் டே" கொண்டாடினால் வீட்டுக்கு போக வேண்டியதுதான் என்று மாணவர்களுக்கு விழுந்துள்ளது "டி.சி. ஆப்பு"
"பஸ் டே" கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் அலப்பறைகள் பெரும் தகராறில் போய் முடிந்து விடுகின்றன.
இதனால் பொதுமக்களுக்கும், பொது உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பஸ் டே கொண்டாடத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகரக் காவல் ஆணையரகத்தில் நடந்தது.
இதில் ‛பஸ் டே' கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டால் டி.சி., வழங்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர்களும், நிர்வாகிகளும் இதற்கு நாங்க "சப்போர்ட்ன்னு" உறுதி கொடுத்துள்ளனர். அப்போ... மாணவர்களே உங்களுக்கு "ஆப்பு" கன்பார்ம்...