கோவில்பட்டி:
சூரிய ஒளியில் டிராக்டர் இயங்குமா... முடியும் என்று சாதித்து காட்டியுள்ளார் கோவில்பட்டி மாணவர் ஒருவர். இதை பற்றி தெரிஞ்சுக்குவோம் வாங்க...
கோவில்பட்டியில் சூரிய ஒளியில் இயங்கும் டிராக்டரை கண்டுபிடித்து மாணவர் இளம் விஞ்ஞானி விருதை தட்டிச் சென்றுள்ளார். இவருக்கு ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சிவசூர்யா. 10ம் வகுப்பு மாணவர். விவசாயத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட சிவ சூர்யாவிற்கு ஏதாவது புதுமையான படைப்பை செய்ய வேண்டும் என்று ஆர்வம் அதிகம். இதில் விவசாயிகளுக்கு உதவ புதுமையான படைப்பை உருவாக்க நீண்ட நாள் போராடியுள்ளார். இதில் ஏற்பட்டதுதான் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய டிராக்டர்.
இந்த டிராக்டர் சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த டிராக்டர் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அப்துல்கலாம் பவுன்டேசன் மற்றும் ரஷ்யன் கலை மற்றும் அறிவியல் அமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிக்கான போட்டியில் இடம்பெற்றது.
இந்த கண்டுபிடிப்பிற்காக சிவசூரியாவிற்கு இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 10 நாட்கள் பயிற்சி கொடுக்க இருக்காங்களாம்... வெல்செட் சிவா... வாழ்த்துக்கள்...