

இந்த படத்தில் தீரன் படத்தில் ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் கார்த்திக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், நவரச நாயகன் கார்த்திக் என பலரும் நடிக்க, லிவின் மற்றும் கள்ளச்சிரிப்பு வெப் சீரீஸ் புகழ் அம்ருதா ஸ்ரீனிவாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தை பாராட்டி யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். தேவ் படம் பிப்ரவரி பதினான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் காதல் மற்றும் பயணம் சம்பந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளது, இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.