இன்றைய காலத்தில் ஆரோக்கிய உணவுசாப்பிட நினைத்தாலும் அது முடியாது, காரணம் உணவு பொருட்களில் கலப்படம். நாம் உபயோகிக்கும் அனைத்து பொருட்களிலும் கலப்படம் அதிகரித்துவிட்டது.
ஆரோக்கியத்தை விட லாபமே வேண்டுமென நினைக்க தொடங்கியதன் விளைவு இது.இனிப்புகளை சுற்றி சில்வர் படலம் பிரபலமாகி வருகிறது, ஆனால் அதிலும் கலப்படம் தொடங்கி விட்டது. சில்வர் பேப்பரை விரலால் தொட,அது விரலில் ஓட்டினால் அது கலப்படம்.
மஞ்சள் தரத்தை சோதிக்க மஞ்சள் வேர்களை பேப்பரில் எடுத்து அதன்மீது குளிர்ந்த நீரை தெளிக்க, வண்ணம் நீங்கினால் அது கலப்படம் நிறைந்த மஞ்சள். இவ்வாறு பல வகைகளில் கலப்படத்தை கண்டுபிடிக்கலாம்.