அலர்ஜியால் திடீரென சளி பிடிக்கும். நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்சனையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 


10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்பளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்.


சளி பிரச்சனைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.



Find out more: