கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் அதிகமானால் வாய்ப்புண், கண் எரிச்சல், தூக்கமின்மை போன்றவை ஏற்படும். அகத்தி கீரையை பயன்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்கும் உணவை தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை, சின்ன வெங்காயம், வர மிளகாய் மற்றும் சீரகம் கலந்த பசை, மஞ்சள் பொடி, அரிசி ஊற வைத்த தண்ணீர், சமையல் எண்ணெய், உப்பு.
ஒரு பாத்திரத்தில் அரிசி நீரை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது மஞ்சள் பொடி, அகத்திக்கீரை சேர்க்கவும். கொதித்தபின் சமையல் எண்ணையை ஊற்றவும்.


இதனுடன் வெங்காயம் மற்றும் சீரகம் சேர்ந்த பசை உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணையுடன் , சின்ன வெங்காயம், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து, அகத்தி ரசத்தை தாளிக்கவும். இதை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். அகத்தி கீரை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும்.



Find out more: