சென்னை:
வளருது... வளருது... எடுத்துட்டு வாடா கோடாரியை என்று மரம் நன்கு வளரும் முன்பே போட்டுத் தள்ளுவதுதான் மனிதர்களின் குணம். ஆனால் அந்த மரங்களின் பயன்? அதை அப்புறம் பார்ப்போம்... இப்போது வெட்டுவோம் என்று தான் இருக்கிறார்கள்.


மண் வளத்தை காப்பாற்றி, மழை வளத்தை கொடுத்து சுத்தமான காற்றை வழங்குவது மரங்கள்... இது தெரிந்த விஷயம்தான். ஒரு மரம் அதிகபட்சம் எவ்வளவு ஆண்டுகள் வரை இருக்கலாம். 30, 50 ஏன் சில ஆலமரங்கள் 100 ஆண்டுகள் கடந்தும் உள்ளன.


ஆனால் இந்த மரத்திற்கு 1500 வயது... அதாவது 1500 ஆண்டுகள் உயிர் வாழும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? குத்து மதிப்பாக 15, 15 தலைமுறைகளை பார்த்து விடுகின்றன. அது எந்த மரங்கள் என்று தெரியுமா... ஆலிவ் மரங்கள்தான். இவற்றின் ஆயுள் 1500 வருடம். அரிய தகவலில் இரண்டு.


Find out more: