கால் ஆணியை குணப்படுத்துவதற்கான குறிப்பினை, இன்றைய மருத்துவ தகவலில் நாம் பார்க்கலாம்.  கால் ஆணியை சரி செய்ய மூன்று குறிப்புகள் உள்ளது அவற்றின் விளக்கங்கள் பின்வருவனவற்றில், ஒன்று ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளன.


1. மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு, ஆகியவற்றை விழுதாய் அரைக்க வேண்டும். அரைத்த விழுதினை கால் ஆணி இருக்கும் இடத்தில், 21 நாட்கள் தொடர்ந்து பூசி வரவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கால் ஆணி விரைவில் குணமடையும். 


2. கால் ஆணி வந்தவுடனையே, பூண்டை நசுக்கி அதன் சாற்றை அதில் விட்டுவந்தால், விரைவில் சரியடையும். மேலும் ஒரு துணியில் நசுக்கிய பூண்டை வைத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் கட்டி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.


3. மல்லிகை இலையை இடித்து, அதன் சாற்றை எடுத்து பாதத்தில் பற்று போட்டு வந்தாலும், நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு செய்வதனால், கால் ஆணி பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.



Find out more: