படர்தாமரை தோலில் ஒரு இடத்தில் பரவி, அனைத்து இடங்களிலும் பரவக் கூடியவை. படர்தாமரை வந்தால், அதை போக்க கடைகளில் விற்கும் க்ரீம்களை பயன்படுத்துவோம். ஆனால் க்ரீம் உபோயகிப்பதால், நமக்கு முழு தீர்வு கிடைக்காது. இதனை முழுமையாக குணப்படுத்தும், எளிய பாட்டி வைத்தியத்தை இன்றைக்கு நாம் பார்க்கலாம்.
தேவையானவை : பப்பாளி இலை
சுத்தமான பப்பாளி இலையை எடுத்துக் கொண்டு, அம்மியில் மையாக அரைக்க வேண்டும். பின் அரைத்த விழுதுகளை படர்தாமரை இருக்கும் இடத்தில், காலை குளியலை முடித்த பிறகு, தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மேலும் இரவு படுக்கும் முன்பும், இவ்வாறு தடவ வேண்டும். தொடர்ந்து இதை 7 நாட்களுக்கு பின்பற்றினால், படர்தாமரை மறைந்து காணாமல் போய் விடும்.