சூடு தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளை இன்றைய ஆரோக்கிய தகவலில் நாம் பார்க்கலாம். 


1. வெந்நீர் அடிக்கடி குடித்து வந்தால்,வாயுத் தொல்லை நீங்கும்.


2. அடிக்கடி சூடான நீர் அருந்தி வந்தால், அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குணமடையும்.


3. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.


4. வயிற்றில் உள்ள புண்களின் வலி, சூடு வெந்நீர் அருந்துவதால் குணமடைகிறது. 


5. இறைச்சி போன்ற அசைவ உணவுகளை உண்ட பின்பு, இதமான சூட்டில் வெந்நீர் அருந்தினால், சீக்கிரமாக ஜீரணம் அடையும்.


6. பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு, வேகவிட்டு வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால், மிருதுவான சருமம் பெறலாம். 


7. இதமான சூட்டு வெந்நீரை, அடிக்கடி குடித்து வருவதனால், உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.


8. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு வெந்நீர் குடித்தால், பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்கும். 


9. உடல் எடை அதிகம் உள்ளவர்கள், அதிகாலை எழுந்தவுடன் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வருவதனால், உடை எடை குறையும். 


10. மலம் கழிப்பதில் சிரமம் உள்ளவர்கள், இதமான சூட்டில் உள்ள நீரை அருந்தலாம். இது நல்ல தீர்வை அளிக்கும்.



Find out more: