ஆரோக்கியமாக வாழ கால்சியம் சத்து மிகவும் முக்கியம். நம் உடம்பில் கால்சியம் சத்து குறைவு ஏற்பட்டால், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதோடு  மூட்டு வலி பிரச்சனையும் வரும். கால்சியம் நிறைந்த உணவு பொட்டுகளை இன்றைய ஆரோக்கிய தகவலில் நாம் பார்க்கலாம்..


பால் 


பால், கால்சியம் சத்து நிறைந்த உணவாகும். இதை பெண்கள் கண்டிப்பாக அருந்த வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய பால் மிகவும் அவசியம்.


தயிர் 


பால் அருந்த பிடிக்காதவர்கள் தயிர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இருக்கும் அளவு கால்சியம் சத்து, தயிரிலும் உண்டு. 


இறால் 


மீனில் அதிக கால்சியம் சத்துள்ள மீன் இறால் ஆகும். இறாலை அதிகமாக வேக வைத்தால் இதில் இருக்கும் கால்சியம் போய் விடும். அதனால் அதிகமாக வேக விடாமல் இதை சமைத்து சாப்பிடலாம். 


சீஸ் மற்றும் அத்திப்பழம் 


பாலை கொண்டு உருவாகும் சீஸிலும் அதிக கால்சியம் சத்து உண்டு. அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து இருக்கு. இதை கருவுற காத்திருக்கும் பெண்கள் சாப்பிட்டால் நல்ல பலன் அளிக்கும்.


கீரை 


பச்சை கீரைகளில் அதிகமான அளவு கால்சியம் சத்து உண்டு. தினமும் சாப்பாட்டில் கீரை எடுத்து வருவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


பாதாம் 


இரவு தூக்கத்திற்கு முன்போ அல்லது காலை எழுந்தவுடனோ பாதாம் சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு நல்லது. இதில் 80 சதவீத கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பாதாமை சாப்பிட்டு வருவதனால் பல் சம்மந்தப்பட்ட குறைப்பாடுகளை சரி செய்யலாம்.



Find out more: