நாம் அன்றாடம் சமையல் செய்யும் போது, உணவில், கருவேப்பிலையை தாளிப்பதற்கும், வாசனைக்கும் மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். இதன் நற்குணங்கள் நம்மில் பலருக்கும் தெரியாது. கருவேப்பிலை நமது உடல் ஆரோக்கியத்தை கூட்டும் மருந்து பொருளாகும்.


கறிவேப்பிலையின் பல்வேறு மருத்துவ குணங்களை இன்றைக்கு நாம் ஆரோக்கிய தகவலில் பார்க்கலாம்.


கறிவேப்பிலையால் காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யை நாம் தலை முடிக்கு பயன்படுத்திவந்தால், முடி கொட்டும் பிரச்சனைகள் சரியாகும்.


சமையல் வாசனைக்கு சேர்க்கப்படும் கருவேப்பிலை, பெருங்குடல் புற்று நோயை குணப்படுத்தும் தன்மை உடையது. 


கறிவேப்பிலையில், இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதை நாம் ஜூஸாக்கி குடித்து வந்தால், நம் உடலில்  இரும்பு சத்து குறைவு ஏற்படாது.
நீரிழிவு நோயாளிகள், காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மலையில் 10 கறிவேப்பிலை இலையையும் வாயில் போட்டு மென்று வந்தால், மாத்திரையின் அளவை குறைக்கலாம்.


பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்த இழப்பினால் இரும்பு சத்து குறைவு ஏற்படும், இதை சரி செய்ய கறிவேப்பிலையை விட சரியான மருந்து வேறு எதுவும் இல்லை. 


கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதை மென்று தின்றால் நல்ல பயன் கிடைக்கும்.



Find out more: