இரத்த சோகையை குணப்படுத்துவதில், கேழ்வரகிற்கு முக்கிய பங்கு உண்டு. இதன் மருத்துவ பயன்களை நாம் இன்றைய ஆரோக்கிய குறிப்பு தகவலில் பார்க்கலாம்.
பாலில் இருக்கும் கேல்சிய சத்தை விட, கேழ்வரகில் அதிகமான கேல்சிய சத்துக்கள் உள்ளன.
கேழ்வரகை தினமும் சாப்பாட்டில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.
அதிக உடல் எடை இருப்பவர்கள், கேழ்வரகு சாப்பிட்டால், உடல் எடை குறையும்.
இதில் நார் சத்து அதிகம் இருப்பதால், கூழ் செய்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இரத்த சோகை நோய் குணமடையும்.
மலசிக்கல் இருப்பவர்கள், கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிடலாம்.
கேழ்வரகால் செய்த உணவை, தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தீரும். குடலுக்கு மிகவும் நல்லது.
கேழ்வரகில், தாது, உப்பு மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.