மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த குப்பை மேனி இலையை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை, இன்றைய மருத்துவ குறிப்பு தகவலில் நாம் விரிவாக பார்க்கலாம்..
எளிதில் கிடைக்க கூடிய பச்சிலையில் குப்பை மேனியும் ஒன்று.
குப்பை மேனி இலையை, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, இளம் சூட்டில், புண் இருக்கும் இடத்தில கட்டி வந்தால் புண்கள் ஆறிவிடும்.
குப்பை மேனி இலையை சாறு எடுத்து, அதனுடன் வேப்பெண்ணை கலந்து, சிறு குழந்தைகளுக்கு தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவி வந்தால், வயிற்றில் இருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும்.
குப்பை மேனி இலையுடன், மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு, கரும் புள்ளிகள், தேவையற்ற ரோமங்கள் நீங்கும்.
குப்பைமேனி இலையை, ஆமணக்கு எண்ணையில் தாளித்து, தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால் வாயுத்தொல்லை நிரந்தரமாக நீங்கும்.