பொதுவாக காய்கறிகள் சாப்பிடுவது நம் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் எந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால், என்னென்ன பலன் கிடைக்கும் என்பது நமக்கு தெரியாது. கேரட்டை நம் உணவில் சேர்த்து கொள்வதனால், ஏற்படும் நன்மைகளை பற்றி, நாம் இன்றைக்கு பார்க்கலாம். 


கேரட்டை தாவரத் தங்கம் என்று அழைக்கிறோம். ஏனெனில், இதை உண்பதால் நம் மேனி தங்கம் போன்று பளபளாக இருக்கும் என்பதற்காகவே இதை தவாரத் தங்கம் என்று கூறுகிறோம். 


புற்று நோயை தடுப்பதில், கேரட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. இதை தினமும் உணவில் சேர்த்து கொண்டால், புற்று நோய் வருவதை தடுக்கலாம்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 


தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் காரட் ஜூஸ் குடித்து வந்தால், குடல் புண் சரியடையும். இதை தொடர்ந்து 2 மாதம் பின்பற்றி வந்தால், குடல் புண் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்களை சரி செய்துவிடலாம்.


கேரட்டில் நார் சத்து அதிகம் இருப்பதால், மலசிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 


கண் பார்வை குறைப்பாடு உடையவர்கள், கேரட்டை உணவில், தொடர்ந்து சேர்த்து கொண்டு வந்தால், நல்ல மாற்றத்தை பார்க்கலாம். 



Find out more: