இடுப்பு பகுதியில் காணப்படும், தேவையற்ற சதையை குறைக்க நினைப்பவர்கள், சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். தொடர்ந்து சுரைக்காயை சாப்பிட்டு வந்தால், உடல் எடை நன்கு குறையும்.
பப்பாளி காயை உணவில் சேர்த்து வந்தால், உடல் மெலியும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், சூடு நீரில், எலுமிச்சை சாறு கலந்து, 1 தேக்கரண்டி தேனையும் கலந்து குடித்து வந்தால், தொப்பை குறையும்.
வாழைத்தண்டு மற்றும் அருகம்புல் ஜூஸ் இரண்டையும் பருகுவது உடல் நலத்திற்கு நல்லது. இதோடு உடல் எடையம் குறையும்.
அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
கொள்ளு ஜூஸ், கொள்ளு சாதம் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை பாதியாக குறைந்து விடும்.
வெறும் வயிற்றில் க்ரீன் டி பருகி வந்தால் உடல் எடை மெலிவதை நீங்களே உணரலாம்.