கொத்தமல்லி இலையை நாம் சமையலில் வாசனைக்காக பயன்படுத்துவோம். ஆனால் இதில் ஏரளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். 


கொத்தமல்லி இலையில், இரும்பு சத்து அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.


கொத்தமல்லி இலையை உணவில் சேர்த்து கொள்வதனால், காய்ச்சல் குணமாகும். 


வாதம், பித்தம் இருப்பவர்கள் இதை உணவில் சேர்த்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.


இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இதன் சாற்றை பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் அடையும்.


கர்ப்ப காலத்தில் தண்ணீரில், ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.


Find out more: