நோய்களை விரட்டும் கரிசலாங்கண்ணி கீரையின் நற்குணங்களை விரிவாக இன்றைய ஆரோக்கிய தகவலில் நாம் பார்க்கலாம்.
கரிசலாங்கண்ணியில் பொதுவாக நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் மஞ்சள் பூ பூக்கும் வகைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கண் பார்வை கோளாறு உடையவர்கள், கரிசிலாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்து வந்தால், பார்வை திறன் மேம்படும்.
இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உடையது.
இந்த கீரையின் சாற்றை தலையில் தேய்த்து வந்தால், முடி கருகருவென வளரும்.
கரிசலாங்கண்ணி சாற்றுடன், தேன் கலந்து குடித்து வந்தால் சளி தொல்லைகள் நீங்கும்.
உடல் பருமனாக இருப்பவர்கள், இந்த கீரையை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம். ஏனெனில், இது கொழுப்பை கரைத்து, உடலை மெலிய வைக்கும்.