வாய் துர்நாற்றம் என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னையாகும். பற்கள், நாக்கு இரண்டையும் எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்க தான் செய்கிறது. 


வாய் துர்நாற்றத்தை, இயற்கை வழிமுறைகளை பின்பற்றி சரி செய்யலாம். அதை நாம் இப்போது பார்க்கலாம்.


1. தினமும் 2-3 கிராம்பை வாயில் போட்டு, நன்கு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் அடிக்காது.


2. எலுமிச்சை சாறில் தண்ணீர் சேர்த்து, தினமும் இரண்டு, மூன்று தடவை வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் வராது.


3. புதினா இலையை வாயில் மென்று வந்தால், வாய் துர்நாற்றம் வீசுவது குறையும்.


4. தினமும் துளசி இலையை, வாயில் போட்டு மென்று வந்தால் வாய் புத்துணர்ச்சி அடையும். 


5. ஏலக்காயில் உள்ள விதைகளை வாயில் போட்டு மென்று வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.


Find out more: