சில சமயங்களில், நமக்கு நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் ஏற்படுவது உண்டு. இதை சரி செய்ய கடைகளில் விற்கப்படும் ஜீரண மருந்துகளை நாம் வாங்கி, உண்போம். ஆனால் இந்த மருந்துகளில் அதிகளவு, அலுமினியம் ஹைட்ராக்ஸைட் இருப்பதனால், பக்க விளைவுகளை தரும்.
எனவே இந்த பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை மருத்துவத்தை பற்றி நாம் இன்றைக்கு பார்க்கலாம்.
1. துளசி

நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், வாயு தொல்லை போன்றவற்றிற்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால், துளசி இலை சாறை அருந்தினால், உடனே நிவாரணம் கிடைக்கும்.
2. சோம்பு

சோம்பு ஜீரண சக்தி கொண்டது. இதை நாம் நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் மென்று, தின்னு வந்தால், உடனே சரியாகும்.
3. பட்டை

ஜீரண சக்தியை தூண்டுவதில் பட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. பட்டை பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால், வயிற்று எரிச்சல் அடங்கும்.
4. மோர்

மோர் மிகவும் குளிர்ச்சியான பானம். மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.
5. கிராம்பு

கிராம்பு பொடியை நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.