உடல் ஆரோக்கியத்திற்கு, கீரைகள் மிகவும் முக்கியமானது. இதில் சத்துக்கள் நிறைந்துள்ளதால், மருத்துவர்கள் இதை தினமும் உணவில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
கீரை வகைகளுள் ஒன்றான பசலை கீரையின் நற்குணங்களை நாம் இப்போது பார்க்கலாம்.
1. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், வாரம் 3 முறை பசலை கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும்.
2. பசலை கீரை, புற்று நோய் வராமல் தடுக்க செய்கிறது.
3. கண் பார்வை குறைப்பாடு இருப்பவர்கள், பசலை கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இதை பார்வையை அதிகரிக்க செய்யும்.
4. பசலை கீரை, ரத்த அழுத்தத்தை குறைக்க செய்கிறது.
5. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள், பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.